புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது – எங்கள் மாலை  வகுப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன

புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது, அதனுடன் எங்கள் மாலை  வகுப்புகளும் முழுமையாக இயங்கத் தொடங்கியுள்ளன!
குன்னப்பட்டு கல்வி மையத்தில் குறிப்பேடுகள் விநியோகம்
மலர் டிரஸ்ட் இந்தியா குழுவினர் அனைத்து மையங்களையும் பார்வையிட்டு, மாணவர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்தனர். எப்போதும் போல், கல்வி ஒன்றே  வருமையே போக்க சிறந்த வழி என்பது குறித்து அவர்களுக்கு நினைவூட்டினோம்.
சில கிராமங்களில் அம்மாக்களையும் சந்தித்து, நாங்கள் சேவை செய்யும் சமூகங்களுடனான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளோம்.
திரு ரூபகாந்தன் பூஞ்சேரி மாசிமா நகர் பெண்களிடம் பேசுகிறார்
பார்வைகளின் முடிவில், அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு புத்தங்கங்கள் வழங்கப்பட்டன. தேவையுள்ளவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கினோம்இது ஒரு சிறிய உதவி போலத் தோன்றலாம், ஆனால் குழந்தைகளின் கல்விப் பயணத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஆண்டும், குன்னப்பட்டு மற்றும் பஞ்சந்தீர்த்தி கிராமங்களில் இருந்து மானாமதி பள்ளிக்குப் போகும் இலவச போக்குவரத்தை நாங்கள் மீண்டும் ஏற்பாடு செய்துள்ளோம், இது மாணவர்கள் பள்ளிக்கு பாதுகாப்பாகவும் தொடர்ந்து செல்ல உதவுகிறது.
பஞ்சந்தீர்த்தி மையத்தில் ஒரு சிறிய புதுப்பிப்பு: நாம் இதற்கு முன்பு பயன்படுத்திய கட்டிடத்தை விட்டுவிட வேண்டிய நிலை ஏற்பட்டது, புதிய இடம் தேடுவதில் சிரமம் இருந்தது. இந்தச் சூழ்நிலையில், எங்கள் அர்ப்பணிப்பு மிகுந்த ஆசிரியை தன் வீட்டிலேயே பிற்பகல் வகுப்பை நடத்த முன்வந்தார். வகுப்பு முடிந்ததும், குழந்தைகளை பழங்குடி பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் அழைத்து செல்லும் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு முதல் பாடத்தில் கலந்து கொள்ள திவ்யா டீச்சர் தோட்டத்தில் அமர்ந்திருக்கும் பஞ்சர்தீர்த்தக் குழந்தைகள்.
எங்கள் ஊழியர்களின் மற்றும் சமூகங்களின் உறுதி மற்றும் அர்ப்பணிப்புக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்.