மலர் டிரஸ்ட் – ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்

மலர் டிரஸ்ட் இந்தியா தனது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, பொருளாதார நிலை குறைந்த மற்றும் திறமையான மாணவர்களுக்கு 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான சுமார் 9 இலட்சம் ரூபாய் கல்வி உதவி தொகையாக வழங்கியுள்ளது.
இந்த உதவியின் மூலம் பல மாணவர்கள் தங்கள் கல்வியை இடையூறு இல்லாமல் தொடரும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

நம்பிக்கை, அன்பு, மற்றும் ஒற்றுமை ஆகிய மதிப்புகளின் அடிப்படையில் செயல்படும் மலர் டிரஸ்ட், வருடந்தோறும் சமூக நலத்திட்டங்களுடன் கல்வி உதவி நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. கல்வி உதவி பெறும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி மட்டங்களில் சிறந்த முன்னேற்றம் காண்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சி, கல்வியின் மூலம் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட மலர் டிரஸ்ட் இந்தியாவின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
கல்வியே வாழ்க்கையை மாற்றும் வித்தக சக்தி” என்பதை நம்பி, அந்த ஒளியை மேலும் பல குழந்தைகளின் வாழ்க்கையில் பரப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.,

“ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி உரிமையாக மட்டுமல்ல, அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் சக்தியாகும்.  அதற்கு துணை நிற்பதில் மலர் டிரஸ்ட் பெருமை கொள்கிறது.

இத்திட்டம் பல குடும்பங்களுக்கு நம்பிக்கையையும், பல மாணவர்களுக்கு புதிய ஆரம்பத்தையும் அளித்துள்ளது.

குறிப்பாக, ஷெரிபா என்ற மாணவி மலர் டிரஸ்ட் மூலம் கல்வி உதவி பெற்று, SIET கல்லூரியில் புள்ளியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கொண்டிருகின்றாள்,  தந்தையை இழந்தவள் தாய் ஒரு சிறிய ஹோட்டலில் பணியாளராக தினக்கூலி வேலை செய்பவள். ஷெரிபா மிக சிறந்த மாணவி என்ற அவார்ட் ஐ பள்ளி கல்வி  துறை மூலமாக பெற்று இறக்கின்றாள்  என்பதை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறது மலர் டிரஸ்ட். இது போன்ற சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கியதற்கு. மலர் டிரஸ்ட் மூலமாக கல்வி உதவி தொகை பெரும் மாணவ மாணவிகள் மென்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.